வாவ்!! திருமண உடையில் தேவதையாய் ஜொலிக்கும் நயன்தாரா!! வைரல் திருமண புகைப்படங்கள் இதோ..



Nayanthara vignesh shivan marriage photos

திருமண உடையில் தேவதையாய் ஜொலிக்கும் நடிகை நயன்தாராவின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகிவருகிறது.

தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுபவர் நயன்தாரா. பல்வேறு காதல் தோல்வி, காதல் சர்ச்சை என சிக்கி, பல்வேறு விமர்சனங்களை சந்தித்த இவர், இன்று அனைத்து தடைகளையும் உடைத்தெறிந்து இந்திய அளவில் முன்னணி நாயகியாக  புகழின் உச்சத்தில் உள்ளார்.

nayanthara

சினிமாவில் பெரிய அந்தஸ்தில் இருக்கும் நயன்தாரா, இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்துவந்தார். பல ஆண்டுகளாக இருவரும் காதலித்துவந்தாலும், இவர்கள் இருவருக்கும் எப்போது திருமணம் என்ற கேள்விதான் ரசிகர்கள் மனதில் ஓடிக்கொண்டிருந்தது. அந்தவகையில் நயன்தாரா - விக்னேஷ் சிவன் இருவரும் இன்று பிரம்மாண்டமாக திருமணம் செய்துக்கொண்டனர். திருமணம் மகாபலிபுரத்தில் இருக்கும் தனியார் ரிசார்ட்டில் நடைப்பெற்றது.

nayanthara

இந்த திருமண விழாவில் இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார், மணிரத்னம், கவுதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்ட முக்கிய இயக்குனர்கள், ரஜினிகாந்த், கார்த்தி, சூர்யா, ஷாருக்கான் உள்ளிட்ட முக்கிய நடிகர்களும் பங்கேற்றுள்ளனர். இந்நிலையில் நயன்தாரா - விக்னேஷ் சிவன் இருவரின் திருமண புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது.

nayanthara