சினிமா

நயன்தாராவா இது..? சினிமாவிற்கு வருவதற்கு முன் தொலைகாட்சியில் தொகுப்பாளராக இருந்த லேடி சூப்பர்ஸ்டார்.! வைரல் வீடியோ.!

Summary:

Nayanthara tv anchoring video before cinema

இன்று சினிமாவில் முன்னணி நடிகர், நடிகைகளாக இருக்கும் பலரும் சினிமாவிற்கு வருவதற்கு முன் சாதாரண பணியில் இருந்துவிட்டு பின்னர் சினிமாவிற்கு வந்தவர்கள்தான். தல அஜித் சினிமாவிற்கு வருவதற்கு முன் மெக்கானிக்காக வேலை பார்த்தவர், சூப்பர் ஸ்டார் ரஜினி பேருந்து நடத்துனர். இப்படி பலருக்கு பின்னால் பல்வேறு ரகசியங்கள் உள்ளன.

அந்த வகையில், இன்று தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படும் நடிகை நயன்தாரா சினிமாவில் நடிக்க வருவதற்கு முன் என்ன வேலை பார்த்தார் என்பது பற்றித்தான் பார்க்க உள்ளோம். ஐயா திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமான நயன்தாரா இன்று புகழின் உச்சத்தில் இருக்கும் முன்னணி நடிகை.

பல கோடிகளில் சம்பளம் வாங்கும் இவர், பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடிப்பது மட்டும் இல்லாமல், தனி ஒரு நாயகியாக பல படங்களில் நடித்துவருகிறார். இன்று முன்னணி நாயகியாக, லேடி சூப்பர் ஸ்டாராக இருக்கும் நயன்தாரா சினிமாவிற்கு வருவதற்கு முன் கேரளாவை சேர்ந்த பிரபல தொலைக்காட்சி ஒன்றில் நிகழ்ச்சி தொகுப்பாளராக வேலை பார்த்துள்ளார்.

தற்போது அவர் தொக்கு வழங்கிய சில வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகிவருகிறது.


Advertisement