தெலுங்கானா என்கவுண்டர்! பொங்கி எழுந்த நயன்தாரா! - TamilSpark
TamilSpark Logo
சினிமா

தெலுங்கானா என்கவுண்டர்! பொங்கி எழுந்த நயன்தாரா!

 

தெலங்கானா மாநிலத்தில் பெண் மருத்துவரை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்தவர்களை அம்மாநில போலீசார் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொன்றனர்.

தெலுங்கானாவில் நடந்த என்கவுண்டருக்கு பாராட்டுகளும், ஆதரவுகளும் பெருகி வந்தது. ஒரு சிலர் என்கவுண்டர் செய்தது தவறு என்றும், அவர்களுக்கு சட்டப்படி தண்டனை வழங்கியிருக்க வேண்டும் என கூறி இது தொடர்பாக வழக்கும் தொடர்ந்தனர்.

இந்தநிலையில் தெலுங்கானா என்கவுண்டர் குறித்து நடிகை நயன்தாரா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறுகையில், சரியான நேரத்தில் வழங்கப்படும் நீதிக்கு இணையில்லை. இந்த கூற்று இன்று உண்மையாகியிருக்கிறது என தெரிவித்துள்ளார்.

 காட்டுமிராண்டிகளின் ஈனத்தனமான, சட்டத்திற்கு புறம்பாக, பெண் மீது காட்டப்பட்ட வன்முறைக்கு எதிராக தீர்க்கமான பதிலளித்துள்ளார்கள். பெண்களின் முன்னேற்றத்தையும் பாதுகாப்பையும் உறுதி செய்வது நம் கடமை என்றும் இந்த நடவடிக்கை என்பது சரியாக வழங்கப்பட்ட நீதி, இதுவே நியாயமான மனிதமிக்க நடவடிக்கை என அழுத்தி சொல்வேன் எனவும் அவர் கூறியுள்ளார். 


Advertisement


தொடர்புடைய செய்தி:


TamilSpark Logo