அடேங்கப்பா.! நயன்தாராவிற்கு ஒரு படத்திற்கு மட்டும் இவ்வளவா? வெளியான தகவலால் வாயை பிளந்த ரசிகர்கள்!!

அடேங்கப்பா.! நயன்தாராவிற்கு ஒரு படத்திற்கு மட்டும் இவ்வளவா? வெளியான தகவலால் வாயை பிளந்த ரசிகர்கள்!!



nayanthara-salary-information-leaked

தமிழ் சினிமாவில் ரஜினி,விஜய் அஜித் சூர்யா, ஆர்யா என பல பிரபலங்களுடன் இணைந்து பல வெற்றிப் படங்களில் நடித்து தற்போது முன்னணி நடிகையாக இருப்பவர் நயன்தாரா. 

தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படும் இவர்  ஐயா திரைப்படம் மூலம் அறிமுகமாகி தென்னிந்திய அளவில் பிரபலமான நடிகைகளில் ஒருவராக உள்ளார் . பல்வேறு சர்ச்சைகள் தன்மீது எழுந்தாலும் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் தனது கடின உழைப்பால் புகழின் உச்சத்தில் உள்ளார் நயன்தாரா.

nayanthara

இந்நிலையில் அவர் சமீபத்தில் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் படங்களை தேர்ந்தெடுத்து, தனது தனி திறமையை ரசிகர்களுக்கு வெளிப்படுத்தி வந்தார். அதனை தொடர்ந்து தற்போது மீண்டும் பிரபல ஹீரோக்களுடன் அதிகமான பட்ஜெட் படங்களில் இணைந்து நடிக்க துவங்கிவிட்டார். சாய்ரா நரசிம்மரெட்டி, பிகில், தர்பார், லவ் ஆக்சன் ட்ராமா என தமிழ், மலையாளம் என பல மொழி  படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் தற்போது நயன்தாரா ஒரு படத்தில் நடிக்க ஹீரோக்களுக்கு சற்று இணையாக சுமார் 4 முதல் 5 கோடி ரூபாய் வரை சம்பளமாக பெற்று வருகிறார் என தகவல் வெளியாகியுள்ளது. இதனை கேட்ட ரசிகர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.