அஜித்தை பழிவாங்குகிறாரா நயன்தாரா.. அதிர்ச்சியில் அஜித் ரசிகர்கள் .?Nayanthara revenge ajith at acting vijay movie


கோலிவுட் திரையுலகில் முன்னணி நடிகையாக இருப்பவர் நயன்தாரா. இவர் பல திரைப்படங்களில் நடித்த 'லேடி சூப்பர் ஸ்டார்.' எனும் பெயர் பெற்றார். 2005 ஆம் ஆண்டு சரத்குமார் நடிப்பில் வெளியான 'ஐயா' திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார்.

Ajith

இதன் பின்பு பல திரைப்படங்களில் நடித்து வெற்றி நாயகியாக தனது இடத்தை நிலைநாட்டி கொண்டார். மேலும் இவர் நடித்தாலே படங்கள் ஹிட்டாகிவிடும் என்று தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் இவரின் கால் சீட்டுக்காக காத்துக் கொண்டிருந்தனர்.

சமீபத்தில் இவருக்கும் இயக்குனர் விக்னேஷ் சிவனிற்க்கும் காதல் ஏற்பட்டு திருமணம் செய்து கொண்டனர். இதன் பிறகு வாடகை தாய்முறை மூலம் இரு குழந்தைகளை பெற்றுக் கொண்ட விக்னேஷ் சிவன், நயன்தாரா தம்பதியினர் அடுத்தடுத்து சர்ச்சைகளில் சிக்கி வருகின்றனர்.

சமீபத்தில் அஜித் படத்தில் அடுத்த இயக்குனராக விக்னேஷ் சிவன் இருக்கிறார் என்று சமூக வலைத்தளங்களில் அறிவிப்பு வெளியானது. இதனையடுத்து அஜித் திரைப்படத்தை விக்னேஷ் சிவன இயக்கவில்லை என்று செய்தி வெளியான போது விக்னேஷ் சிவன் தனது ட்விட்டர் பக்கத்தில் இருந்து பதிவை நீக்கிய செய்தி வைரலாக பரவியது.

Ajith

இது போன்ற நிலையில், தற்போது விஜய் நடிப்பில் வெளியாக இருக்கும் 'லியோ' திரைப்படத்திற்கு பின்பு விஜய் நயன்தாராவுடன் இணைந்து நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இதனால் நயன்தாரா அஜித்தை பழிவாங்குகிறாரா என்று நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். இச்செய்தி இணையத்தில் வேகமாக பரவி வருகிறது