தங்கமான மனசுய்யா.. திருமண நாளில் லேடி சூப்பர்ஸ்டார் செய்த அசத்தலான காரியம்! குவியும் பாராட்டுக்கள்!!



Nayanthara  provide food for orphanage child

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக, லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வரும் நயன்தாரா இயக்குனர் விக்னேஷ் சிவனை கடந்த 7 ஆண்டுகளாக காதலித்து வந்தார். இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில் இருவருக்கும் திருமணம் எப்போது என ரசிகர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வந்தனர்.

இந்த நிலையில் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவருக்கும் இன்று மகாபலிபுரத்தில் கோலாகலமாக திருமணம் நடைபெறுகிறது. அதில் திரையுலக பிரபலங்கள் பலரும் கலந்து கொள்வதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இந்நிலையில் திருமண ஜோடி இருவருக்கும் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

nayanthara

விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இருவரும் தங்களது திருமணத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் உள்ள பல ஆதரவற்றோர் இல்லங்களில் உள்ள 18 ஆயிரம் குழந்தைகளுக்கு இலவசமாக மதிய உணவு வழங்க ஏற்பாடு செய்துள்ளனராம். இது குறித்த தகவல்கள் பரவிய நிலையில் பலரும் அவர்களது நல்ல மனசை பாராட்டி வருகின்றனர்.