சினிமா

ஆஹா..! நயன்தாராவுக்கு ஜோடியாக நடிக்கிறார் விக்னேஷ் சிவன்.? அதுவும் எந்த படத்தில் தெரியுமா.?

Summary:

Nayanthara pair with Vignesh Shivan in next movie

இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்க இருக்கும் படம் ஒன்றில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் நயன்தாராவுக்கு ஜோடியாக அவரது காதலன் விக்னேஷ் சிவன் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

நடிகை நயன்தாராவும் இயக்குனர் சிவனும் காதலித்து வருவது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே. இருவரும் எப்போது திருமணம் செய்து கொள்ளப் போகிறார்கள் என்பதுதான் தற்போது கோலிவுட்டில் நிலவிவரும் கேள்விகளில் ஒன்று. இந்நிலையில் நயன்தாரா விக்னேஷ் சிவன் இருவரும் ஜோடியா ஒரு படத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

நயன்தாரா நீங்க நினைக்கிற மாதிரி ...

காத்துவாக்குல ரெண்டு காதல் என்ற படத்தை இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்க உள்ளார். இந்த படத்தில் விஜய் சேதுபதி நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக சமந்தா நடிக்கிறார். மேலும் இந்த படத்தில் நயன்தாரா ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது. 

இந்நிலையில் அந்த படத்தில் படத்தின் இயக்குனர் விக்னேஷ் சிவனும் நடிக்க இருப்பதாகவும் அவருக்கு ஜோடி நயன்தாரா என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது. நிஜத்தில் காதலர்களாக இருக்கும் இவர்களின் கெமிஸ்ட்ரி திரையில் எப்படி இருக்கப்போகிறது என்பதை காண ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் உள்ளனர்.


Advertisement