அடேங்கப்பா! நயன்தாராவுக்கு ஒரு படத்திற்கு இவ்வளவு சம்பளமா? எத்தனை கோடி தெரியுமா?

அடேங்கப்பா! நயன்தாராவுக்கு ஒரு படத்திற்கு இவ்வளவு சம்பளமா? எத்தனை கோடி தெரியுமா?


nayanthara-new-salary-details-goes-viral-on-internet

சம்பள விஷத்தில் டாப் ஹீரோக்களை பின்னுக்கு தள்ளி முதல் இடத்தில் இருக்கிறார் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா.

கொரோனா ஊரடங்கில் வழங்கப்பட பல்வேறு தளர்வுகளை அடுத்து தற்போது தமிழகத்தில் மீண்டும் திரையரங்குகள் திறக்கப்பட்டுவருகிறது. இதனால் பலநாள் கிடப்பில் கிடந்த படங்கள் திரையரங்குகளில் வெளியாக தயாராகிவருகிறது. அதேபோல் புது படங்களின் படப்பிடிப்பும் தற்போது சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.

Tamil actress new salary

இந்நிலையில் கொரோனா காலத்தில் ஏற்பட்ட இழப்புகளை போக்க டாப் நடிகைகளின் புது சம்பள பட்டியல் ஒன்று தயாராகி இருப்பதாக கூறப்படுகிறது. அதில் நான்கு கோடி சம்பளத்துடன் நடிகை நயன்தாரா முதல் இடத்தில் உள்ளார். இவர் தனி நடிகையாக நடிக்கும் பெரும்பாலான படங்கள் மாபெரும் வெற்றிபெறுவதால் அவருக்கு இந்த சம்பளம் என பேசப்படுகிறது.

அதேபோல் நயன்தாராவுக்கு அடுத்ததாக காஜல் அகர்வாலுக்கு ஒரு படத்திற்கு 2 சம்பளம் வழங்கப்படுகிறது. அவரை தொடர்ந்து தமன்னா, த்ரிஷா, சமந்தா ஆகியோருக்கு 1.5 கோடி சம்பளம் வழங்கப்படுவதாகவும், வாய்ப்புகள் இல்லாமல் தவித்துவரும் நடிகை ஸ்ருதி ஹாசனுக்கு ஒரு படத்திற்கு 1 கோடி சம்பளம் எனவும், கீர்த்தி சுரேஷ் சுரேஷிற்கு 80 லட்சம் எனவும், நடிகை அஞ்சலி ரூ.70 லட்சம், ரெஜினா கசாண்ட்ரா ரூ.60 லட்சம், ஸ்ரேயா ரூ. 50 லட்சம் ரூபாயும் சம்பளம் என அந்த பட்டியலில் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது...