"இது போதும் எனக்கு இது போதுமே வேறென்ன வேணும்" நயன்தாராவின் கொண்டாட்டமான பதிவு..

"இது போதும் எனக்கு இது போதுமே வேறென்ன வேணும்" நயன்தாராவின் கொண்டாட்டமான பதிவு..


Nayanthara instagram post about her life

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நயன்தாரா. இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி போன்ற மொழிகளில் திரைப்படங்கள் நடித்து வருகிறார். தமிழில் முதன் முதலில் சரத்குமார் நடிப்பில் வெளியான 'ஐயா' திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.

nayanthara

மேலும் இப்படத்திற்கு பின்பு பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து ரசிகர்களின் மனதை கவர்ந்தார் நயன்தாரா. தனது நடிப்பு திறமையின் மூலம் "லேடி சூப்பர் ஸ்டார்" எனும் பெயர் பெற்றுள்ளார்.

இவ்வாறு சினிமாவில் உச்சத்தில் இருக்கும்போதே இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு வாடகை தாய் மூலம் இரு ஆண் குழந்தைகள் உள்ளனர்.

nayanthara

இது போன்ற நிலையில், சமீபத்தில் நயன்தாராவின் பிறந்தநாள் அன்று விக்னேஷ் சிவன் வாழ்த்து கூறிய புகைப்படங்களை பதிவிட்டு வந்தார். இதனை அடுத்து தற்போது தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு வாழ்வில் இதை விட வேறென்ன வேண்டும் என்று கூறியிருக்கிறார். இப்பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.