"வீடியோவை டெலிட் பண்ணு.. காசு தரேன்." insta பிரபலத்திடம் நடிகை நயன்தாரா பேரம்.!



nayanthara in new controversy of madurai femi9 programme

ஃபேமி9 சானிட்டரி நாப்கின்

மதுரையில் நடிகை நயன்தாராவின் ஃபேமி9 சானிட்டரி நாப்கின் நிறுவனத்தின் முதல் ஆண்டு விழா நடந்தது. இதில், சமூக வலைதள பிரபலங்களை அவர்கள் அழைத்து இருந்தார்கள். காலை 9 மணிக்கு நிகழ்ச்சி துவங்கும் என்று கூறப்பட்டிருந்த நிலையில், விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இருவரும் 6 மணி நேர தாமதத்திற்கு பின் 3 மணிக்கு நிகழ்ச்சிக்கு வந்துள்ளனர்.

நார்மல் பீப்பிள் இல்லை

இதனால், அங்கே சர்ச்சை ஏற்பட்டது. நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் ஒருவர் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இருவரையும் பார்த்து, "இவர்கள் இருவரும் நார்மல் பீப்பிள் இல்லை. தயவு செய்து கொஞ்சம் கோ ஆபரேட் பண்ணுங்க." என்று கெஞ்சிய ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இந்த வீடியோ பல்வேறு விமர்சனங்களை பெற்று வருகிறது.

இதையும் படிங்க: ஏ.ஆர் ரகுமான் இளமையாக இருப்பதற்கு காரணம் இதுதானா..! அவரே கூறிய உண்மை.!?

nayanthara

adippoli foodie 

இந்த நிலையில் adippoli foodie என்ற ஒரு இன்ஸ்டாகிராம் ஐடியில் நிகழ்ச்சியின் குளறுபடிகள் பற்றிய வீடியோ ஒன்று வெளியிடப்பட்டது. நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களுக்கு உணவு வழங்கவில்லை. கலந்துரையாடல் நிகழ்ச்சி எதுவும் நடக்கவில்லை என பல்வேறு விமர்சனங்களை அவர் வைத்திருந்தார். இந்த விமர்சனம் வைக்கப்பட்ட ஒரு சில மணி நேரங்களில் அந்த வீடியோ டெலிட் செய்யப்பட்டது.

வீடியோவை டெலிட் பண்ண காசு

அதன் பின் ஒரு புதிய வீடியோவை வெளியிட்ட அவர், "நயன்தாராவிடம் இருந்து எனக்கு போன் வந்தது. வீடியோவை டெலிட் செய்ய சொல்லி அவர்கள் கூறினார்கள். நான் முடியாது என்று கூறினேன். எனக்கு பணம் தருவதாக கூறினார்கள். ஆனால், நான் மறுத்து விட்டேன். வீடியோவை ஸ்டிரைக்கடித்து என்னை வீடியோவை டெலிட் செய்ய வைத்து விட்டனர்." என்று தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: ஹாலிவுட் நடிகர் ராக்கை ராக்காயியாக்கிய மகள்கள்.. கவனத்தை பெற்ற குட்டிஸின் லூட்டி வீடியோ.!