பிரபல தொலைக்காட்சியில் விரைவில் களமிறங்கும் நயன்தாரா! ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்ப்பு !! - TamilSpark
TamilSpark Logo
சினிமா

பிரபல தொலைக்காட்சியில் விரைவில் களமிறங்கும் நயன்தாரா! ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்ப்பு !!

தமிழ் சினிமாவில் ரஜினி,விஜய் அஜித் சூர்யா, ஆர்யா என பல பிரபலங்களுடன் இணைந்து நடித்து வெற்றிப் படங்களில் இணைந்து நடித்து தற்போது முன்னணி நடிகையாக இருப்பவர் நயன்தாரா. 

ஏகப்பட்ட ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ள இவர் சமீபகாலமாக கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் வாய்ந்த படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகின்றார். அதனை தொடர்ந்து தற்போது விஜய் 63, தர்பார் உள்ளிட்ட படங்களில் தீவிரமாக நடித்து வருகின்றார்.

இந்நிலையில் நயன்தாரா சின்னத்திரைக்கு வரவுள்ளதாக கூறி கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. 

ஆனால் அது என்ன நிகழ்ச்சி என்பது குறித்த தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை. இதனால் ரசிகர்கள் பெரும் குழப்பத்தில் உள்ளனர். 

மேலும் நெட்டிசன்கள் பலரும் நயன்தாரா  நிகழ்ச்சியை தொகுத்து வழங்க உள்ளாரோ என சின்னிக்க தொடங்கியுள்ளனர்.


Advertisement


ServiceTree
தொடர்புடைய செய்தி:


TamilSpark Logo