நடிகர் ரியாஸ் கானின் மருமகள் வளைகாப்பு; நேரில் வந்து வாழ்த்திய திரைபிரபலங்கள்.!
அடேயப்பா... 50 வினாடிகளுக்கு 5 கோடி ரூபாய் வாங்கிய நயன்தாரா.! ஆச்சரியமான தகவல்.!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் நயன்தாரா. இவர் தமிழ் ரசிகர்களால் லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படுகிறார். சரத்குமார் நடித்த ஐயா திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் சந்திரமுகி கஜினி வல்லவன் தனி ஒருவன் போன்ற திரைப்படங்களின் வெற்றியால் முன்னணி கதாநாயகியாக உயர்ந்தார்.
இவர் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்குப் பிறகு நயன்தாரா நடித்த திரைப்படங்கள் சரியான அளவில் ரசிகர்களிடம் வரவேற்பை பெறவில்லை. எனினும் ஹிந்தியில் அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் உருவான ஜவான் திரைப்படத்தில் நயன்தாரா கதாநாயகியாக நடித்திருந்தார். இந்தத் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதோடு நயன்தாராவிற்கு தாதா சாகேப் பால்கே விருதும் பெற்று தந்துள்ளது.
சினிமாவில் வாய்ப்புகள் அவ்வளவாக இல்லை என்றாலும் ஜவான் திரைப்படத்தின் வெற்றி நயந்தாராவின் மார்க்கெட்டை உயர்த்தி இருக்கிறது. இந்நிலையில் நயன்தாரா 50 வினாடிகள் வரும் விளம்பரத்திற்கு 5 கோடி ரூபாய் சம்பளம் பெற்று இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது . டாட்டா ஸ்கை நிறுவனத்தின் விளம்பரத்தில் நடித்த நயன்தாரா அதற்காக 5 கோடி ரூபாய் சம்பளமாக பெற்றுள்ளார். இந்த விளம்பர படப்பிடிப்பு இரண்டு நாட்கள் நடைபெற்று இருக்கிறது. எனினும் டிவியில் 50 வினாடிகளே வரும் விளம்பரத்திற்கு நயன்தாரா ஐந்து கோடி ரூபாய் சம்பளம் வாங்கி இருப்பது திரைத் துறையில் வியப்பை ஏற்படுத்தி இருக்கிறது.