சினிமா

செம கெத்துதான்.. டாப்பான அந்த கதாபாத்திரத்தில் நடிக்கவிருக்கும் நடிகை நயன்தாரா! எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!!

Summary:

மலையாளத்தில் வெளியாகி மாபெரும் ஹிட்டான திரைப்படம் லூசிபர். பிரித்விராஜ் இயக்கத்தில் உருவான

மலையாளத்தில் வெளியாகி மாபெரும் ஹிட்டான திரைப்படம் லூசிபர். பிரித்விராஜ் இயக்கத்தில் உருவான இத்திரைப்படத்தில் மோகன்லால் அரசியல்வாதியாகவும், கேங்ஸ்டாராகவும் நடித்திருந்தார். இப்படம் வெளியாகி பிளாக்பஸ்டர் அடித்தது. இதனைத் தொடர்ந்து அப்படம் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட உள்ளது.

மோகன் ராஜா இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில் தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி ஹீரோவாக நடிக்க உள்ளார். இந்தப் படம் 200 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாக உள்ளது. மலையாளத்தில் லூசிபர் படத்தில் முதலமைச்சரின் மகளாக மஞ்சுவாரியார் நடித்திருப்பார். இந்நிலையில் தெலுங்கில் அந்த கதாபாத்திரத்தில் நடிக்க நடிகை நயன்தாராவிடம் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

ஆனால் அவர் கால்ஷீட் பிரச்சினையால் நடிக்க மறுப்பு தெரிவித்துள்ளார். அதைத்தொடர்ந்து சில நடிகைகளிடம் பரிசீலிக்கப்பட்ட நிலையில் எதுவும் சரியாக வராத நிலையில், தற்போது மீண்டும் நயன்தாராவிடமே நடிக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. மேலும் இப்படத்தில் நயன்தாரா இணைவார் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.


Advertisement