அட.. அங்கேயும் ஒரே லவ்வுதானா! தனது காதலன் படத்திற்காக நயன்தாரா செய்த காரியம்! வைரலாகும் கியூட் புகைப்படங்கள்!!

அட.. அங்கேயும் ஒரே லவ்வுதானா! தனது காதலன் படத்திற்காக நயன்தாரா செய்த காரியம்! வைரலாகும் கியூட் புகைப்படங்கள்!!


Nayanthara dubbing to vignesh sivan movie

தமிழ் சினிமாவில் பல டாப் ஹீரோக்களுடன் இணைந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்ததன் மூலம் ஹீரோக்களுக்கு இணையாக லட்சக்கணக்கான ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டு லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நயன்தாரா. அவர் நானும் ரவுடிதான் என்ற திரைப்படத்தில் நடித்தபோது, அதன் இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் காதல் வயப்பட்டார்.

நயன்தாரா தற்போது மீண்டும் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் காத்துவாக்குல ரெண்டு காதல் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் ஹீரோவான விஜய் சேதுபதி ராம்போவாகவும், நயன்தாரா கண்மணியாகவும், மற்றொரு கதாநாயகியான சமந்தா கதிஜா என்ற கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். மேலும் இதன் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதிக்கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

படத்திற்கான டப்பிங் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. நயன்தாராவும் இப்படத்திற்காக தனது குரலிலேயே டப்பிங் பேசியுள்ளார். அப்பொழுது எடுக்கப்பட்ட புகைப்படங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த விக்னேஷ் சிவன், கண்மணி அன்போடு காதலன் நான் எழுதிய வசனங்களை நீயே டப் பண்றது மிகுந்த சந்தோஷம் என்று குறிப்பிட்டுள்ளார். அந்தப் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.