தமிழகம் சினிமா

அத்திவரதர் கருவறையில் நயன்தாராவை போட்டோ எடுத்தது யாருனு பாருங்க! வைரல் புகைப்படம்.

Summary:

Nayanthara at athivaradhar temple photo

கடந்த ஒன்றரை மாதமாக தமிழ் நாட்டின் ஹாட் டாபிக் அத்திவரதர்தான். 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே காட்சி தரும் அத்திவரதர் கடந்த ஜூலை ஒன்றாம் தேதி நீரில் இருந்து எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார். இந்நிலையில் இன்றுடன் அத்திவரதர் காட்சி முடிவடைந்து மீண்டும் நீருக்குள் செல்கிறார் அத்திவரதர்.

கடந்த ஒன்றரை மாதங்களாக பலகோடி மக்கள் அத்திவரதரை தரிசனம் செய்தனர். பாரத பிரதமர், இந்திய நாட்டின் குடியரசு தலைவர் என பலரும் அத்திவரதரை தரிசனம் செய்தனர். இந்நிலையில் கடைசி நாள் நெருங்கிவிட்டதால் VIP தரிசனம் ரத்து செய்யப்பட்டு அனைவரும் ஒரே வரிசையில் சென்று தரிசிக்க ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்நிலையில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான நயன்தாரா தனது காதலர் விக்னேஷ் சிவனுடன் நேற்று வரிசையில் சென்று அத்திவரதரை தரிசனம் செய்தார். நயன்தாராவை கண்ட பக்தர்கள் கோவிலுக்கு வந்துள்ளோம் என்பதையே மறந்து விட்டு ஆளாளுக்கு கையில் செல்போனை எடுத்து வீடியோ எடுக்க துவங்கிவிட்டனர். அந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது.


இதில் மேலும் சுவாரசியமான விஷயம் என்னவென்றால் சாமியின் கருவறையில் நயன்தாரா நின்றபோது சாமிக்கு பூஜை செய்யும் அர்ச்சகர் ஒருவர் நயன்தாராவை வளைத்து வளைத்து புகைப்படம் எடுக்கும் காட்சி வெளியாகி வைரலாகிவருகிறது. சினிமா நடிகை என்பதற்காக இப்படியா? என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.


Advertisement