வாவ் க்யூட்.! நயன்தாரா தனது மகனை கொஞ்சும் ஸ்வீட்டான வீடியோ.!

வாவ் க்யூட்.! நயன்தாரா தனது மகனை கொஞ்சும் ஸ்வீட்டான வீடியோ.!


nayanthara-and-her-kid-playing-cute-video-went-viral

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் நயன்தாரா. ஒரு காலத்தில் லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கப்பட்ட இவருக்கு பட வாய்ப்புகள் திருமணத்திற்குப் பிறகு குறைந்தது. சமீபத்தில் இவர் ஜெயம் ரவியுடன் நடித்த இறைவன் திரைப்படமும் வெற்றியடையவில்லை.

ஆனால் நயன்தாரா மற்றும் ஷாருக் கான் நடிப்பில் வெளியான ஜவான் திரைப்படம் உலக அளவில் ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்து மிகப் பெரிய வெற்றி பெற்றது. இந்த திரைப்படத்திற்குப் பிறகு நயன்தாரா புதிய திரைப்படம் பற்றிய எந்த அறிவிப்பை வெளியிடவில்லை.

Kollywoodஅவர் 9 ஸ்கின் என்ற பிசினஸ் தொடங்க இருப்பதாகவும் சமூக வலைதளங்களில் செய்தி வெளியானது. இதற்காக வெளிநாடுகளுக்கு சென்று நிகழ்ச்சியும் நடத்தி வந்தார். நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ஜோடிக்கு வாடகை தாய் மூலம் இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்தது.

சமீபத்தில் தான் இந்த குழந்தைகளுக்கு முதல் பிறந்தநாளையும் கொண்டாடினர். இந்நிலையில் நயன்தாரா தனது மகனை மடியில் போட்டு தூங்க வைக்கும் க்யூட்டான வீடியோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.