செம கியூட்டாக கேரளா பறந்த நயன்- விக்கி ஜோடி.! எதுக்காக தெரியுமா?? வைரலாகும் வீடியோ!!



nayanthara--vignesh-shivan-went-to-cochin

தமிழ் சினிமாவில் ஐயா படத்தில் நடித்ததன் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை நயன்தாரா. முதல் படத்திலேயே அவர் ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமான நிலையில் தொடர்ந்து ரஜினி, விஜய், அஜித், சூர்யா, தனுஷ் என பல முன்னணி பிரபலங்களும் ஜோடி சேர்ந்த ஏராளமான சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்துள்ளார்.

தற்போது லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வரும் அவர் இயக்குனர் விக்னேஷ் சிவனை கடந்த 7 ஆண்டுகளாக காதலித்த நிலையில் ஜூன் 9-ஆம் தேதி மகாபலிபுரத்தில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. இந்த திருமண விழாவில் திரைப் பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள் என பலரும் கலந்து கொண்டனர். ஆனால் நயன்தாராவின் தாயாரின் உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் அவர் திருமணத்திற்கு வரவில்லை என கூறப்படுகிறது.

nayanthara

இந்த நிலையில் நயன்தாரா தனது அம்மாவின் ஆசி பெறுவதற்காக விக்னேஷ் சிவனுடன் கேரளா சென்றுள்ளனர். கொச்சின் விமான நிலையத்தில் நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் நடந்து செல்லும் புகைப்படங்கள்  இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் சில நாட்கள் இருவரும் கேரளாவில் நயன்தாராவின் வீட்டில் தங்க உள்ளதாக தகவல்கள் பரவி வருகிறது.