படப்பிடிப்பு தளத்தில் காலில் விழுந்து, கையெடுத்து கும்பிட்டு கதறி அழுத நயன்தாரா.! இணையத்தில் வெளியான வைரல் வீடியோ..!

படப்பிடிப்பு தளத்தில் காலில் விழுந்து, கையெடுத்து கும்பிட்டு கதறி அழுத நயன்தாரா.! இணையத்தில் வெளியான வைரல் வீடியோ..!


Nayanathara Emotional Atyachar At Sriramarajyam Shooting

இன்று தென்னிந்திய அளவில் நம்பர் ஒன் நடிகையாக இருப்பவர் நடிகை நயன்தாரா. ஐயா திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் இன்று லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படும் அளவிற்கு புகழின் உச்சத்தில் இருக்கிறார்.

மேலும், ரஜினி, விஜய், அஜித் என தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் அனைவருடனும் ஜோடி சேர்ந்து பல்வேறு படங்களில் நடித்துவிட்டார். இன்று புகழின் உச்சத்தில் இருக்கும் இவர் தனது சினிமா பயணத்தில் சந்திக்காத சர்ச்சைகளே இல்லை என்று கூறலாம்.

பலருடன் காதல் சர்ச்சையில் சிக்கினாலும் அதில் இருந்து மீண்டு இன்று நபர் ஒன் நடிகையாக வளம் வருகிறார். இந்நிலையில், தெலுங்கிலும் நயன்தாரா நிறைய படங்களில் நடித்திருந்தாலும் கடந்த 2011 ஆம் ஆண்டு பாலகிருஷ்ணாவுடன் இணைந்து அவர் நடித்த ஸ்ரீ ராம ராஜ்யம் என்ற படம் மிகவும் முக்கியமானது.

nayanthara

இந்த படத்தில் நயன்தாரா சீதையாக நடித்து இருந்தார். பாலகிருஷ்ணா அவர்கள் ராமராக நடித்து இருந்தார். இந்த படத்தின் ஷூட்டிங்கை நல்ல படியாக முடித்து கொடுத்ததற்காக நயன்தாரா மீது படக்குழுவினர் மலர்கள் தூவி வாழ்த்து கூறினார்கள்.  இதனை சற்றும் எதிர்பாராத நயன்தாரா ஷூட்டிங் ஸ்பாட்டிலையே ஆனந்த கண்ணீரில் அழுதார். அவர்களை பார்த்து கையெடுத்து கும்பிட்டு விட்டு இயக்குனரிடம் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்று கொண்டார் நயன்தாரா.

தற்போது அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகிவருகிறது. இதோ அந்த வீடியோ.