அட.. இதுல கூடவா! விக்கி- நயன் திருமணத்திற்கு வந்தவர்களுக்கு வழங்கிய வாட்டர் பாட்டிலை பார்த்தீங்களா! வைரல் புகைப்படம்!!



Nayan wikki marriage water bottle photos viral

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து டாப் ஹீரோயினாக, இளைஞர்களின் கனவுக் கன்னியாக வலம் வந்த நடிகை நயன்தாரா நானும் ரவுடிதான் படத்தில் நடித்த போது அதன் இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் காதலில் விழுந்தார். இருவரும் கடந்த 7 ஆண்டுகளாக தீவிரமாக காதலித்து வந்தனர்.

இந்நிலையில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே அவர்களது திருமணம் இன்று மகாபலிபுரத்தில் அமைந்துள்ள நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றுள்ளது. இதில் 200க்கும் மேற்பட்ட முக்கிய பிரபலங்கள் கலந்து கொள்ள உள்ளதாக தகவல்கள் வெளிவந்தது. மேலும் அவர்களது திருமண நிகழ்ச்சி உரிமையை நெட்ப்ளிக்ஸ் கைப்பற்றிய நிலையில் புகைப்படங்கள் எதுவும் வெளிவரவில்லை.

nayanthara

மேலும் திருமணம் முடிந்த பின்னர் வருகிற ஜூன் 11ந் தேதி நயன்தாராவுடன் செய்தியாளர்களை சந்திப்பதாக விக்னேஷ் சிவன் அறிவித்தார். விக்னேஷ் சிவன் - நயன்தாரா திருமணத்திற்கு வருகை தருபவர்களுக்கு தரும் வாட்டர்பாட்டிலில் கூட வித்தியாசமாக அவர்கள் இருவரும் ஒன்றாக இருக்கும் வெவ்வேறு புகைப்பட ஸ்டிக்கர் ஒட்டி கொடுக்கப்பட்டுள்ளது. அந்தப் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.