
நடிகை நமிதா படப்பிடிப்பு ஒன்றில் கிணற்றில் விழுந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
தமிழ் சினிமாவில் அதிகப்படியான ரசிகர்களை கவர்ந்து பிரபலமானவர் நடிகை நமிதா. இவர் விஜய், அஜித் என பல்வேறு முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். இவர் தற்போது பவ் பவ் என்ற படத்தை தயாரித்து நடித்து வருகிறார்.
கவர்ச்சிக்கு பெயர் போன நடிகை நமீதா முதன்முறையாக தயாரித்து நடித்து வரும் திரைப்படத்தின் படப்பிடிப்பு திருவனந்தபுரத்தில் நடைபெற்று வருகிறது. படப்பிடிப்பின்போது நமீதா பேசிக்கொண்டிருந்த செல்போன், கிணற்றில் தவறி விழுந்தது அதை பிடிக்க நமிதாவும் கிணற்றில் குதித்துள்ளார்.
படப்பிடிப்பை வேடிக்கை பார்க்க வந்த மக்கள் நமீதாவை காப்பாற்றும் முயற்சியில் பதறிய போது, "கட் கட் சூப்பர்" என கை தட்டியுள்ளார் இயக்குனர். பிறகு தான் அது படத்திற்காக எடுக்கப்பட்ட காட்சி என தெரியவந்துள்ளது. ஆனாலும் சமூகவலைதளங்களில் நமீதா கிணற்றில் தவறி விழுந்து விட்டதாக செய்திகள் பரவியது குறிப்பிடத்தக்கது.
Advertisement
Advertisement