இலங்கையிலுள்ள சூதாட்டக் கிளப்பில் நாட்களைக் கழிக்கும் நடிகை நமீதா- புகைப்படம் உள்ளே!

இலங்கையிலுள்ள சூதாட்டக் கிளப்பில் நாட்களைக் கழிக்கும் நடிகை நமீதா- புகைப்படம் உள்ளே!


namitha

நமிதா குஜராத் மாநிலம், சூரத்தில் பிறந்தார். அவரின் வீட்டில் நமிதா கபூர் என்ற பெயரிலே அழைக்கப்படுகிறார். நமிதா 2001 ஆம் ஆண்டு மிஸ் இந்தியா போட்டியில் கலந்து கொண்டு இரண்டாம் இடம் பெற்றார். அந்த போட்டியில் முதல் இடம் பெற்றவர் செலினா ஜெயிட்லி , மூன்றாம் இடம் பெற்றவர் திரிஷா. 'சொந்தம்' என்ற தெலுங்கு படத்தில் அவர் முதன்முதலாக நடித்தார். தமிழில் முதல் படம் 'எங்கள் அண்ணா'. எரிக் மேனிங் இயக்கிய 'மாயா' என்ற ஆங்கிலப் படத்திலும் நமிதா நடித்துள்ளார்.

தமிழ் மொழியில் மட்டுமன்றி கன்னடா, தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் போன்ற மொழிகளிலும் இவர் நடித்திருக்கிறார். பெரிதும் கவர்ச்சியாக நடித்துப் புகழ்பெற்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. பிரபல தமிழ் தொலைக்காட்சி ஒன்றின் நடன போட்டியான  மானாட மயிலாட நிகழ்ச்சியில் நடுவராகப் பங்குப் பெற்றுள்ளார்.

அதன் பிறகு விஜய் டிவியில் பிக்பாஸ்1 சீசனில் கலந்து கொண்டு அனைவரையும் கவர்ந்து வந்தார்.பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் எல்லோர் மனதிலும் மீண்டும் நீங்கா இடத்தை பிடித்துள்ளார் நடிகை நமீதா.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு தனது நண்பரான வீரா என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். தற்போது இலங்கைக்கு சென்றிருக்கும் நமிதா அங்குள்ள சூதாட்ட கிளப்பிற்கு சென்று நாட்களை கழித்து வருகிறார்.