சினிமா

ரஜினி, கமல், விஜய், சூர்யா... அரசியலில் ஜொலிக்கபோவது யார்? பரபரப்பு பதிலளித்த நடிகை நமீதா!

Summary:

Nameetha tweet about rajini, kamal, vijay, surya politics

தமிழ் சினிமாவில் விஜயகாந்த் நடிப்பில் வெளிவந்த எங்கள் அண்ணா திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகை நமீதா. அதனைத் தொடர்ந்து அவள் ஏகப்பட்ட திரைப்படங்களில் கவர்ச்சி நடிகையாக நடித்துள்ளார். மேலும் இவருக்கென ஏராளமான ரசிகர் பட்டாளமே உள்ளது. 

அதனைத் தொடர்ந்து பட வாய்ப்புகள் எதுவும் இல்லாமல் இருந்த நடிகை நமீதா, விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மக்களை மகிழ்வித்தார்.

அதனைத் தொடர்ந்து அவர் நடிகர் வீரேந்திர சவுத்ரியை காதலித்து திருமணம் செய்துகொண்டார். அதன் பிறகும்பல திரைப்படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் நமீதா அண்மையில்  பாஜக கட்சியில் இணைந்து, செயற்குழு உறுப்பினரானார். 

இந்நிலையில் சமீபத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில், அவரிடம் ரஜினி கமல் விஜய் சூர்யா இவர்களில் யார் அரசியலில் பிரகாசிப்பார்கள் என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு நமீதா அவர்கள் 4 பேருமே மிகுந்த பலம் உடையவர்கள். ரஜினி கமல் இருவரும் இரண்டு கண்கள் மாதிரி. மேலும் விஜய் மூளை போல மற்றும் சூர்யா இதயம் போல  என பதிலளித்துள்ளார்.


Advertisement