சினிமா

அசத்தலான புது தோற்றத்தில் பழைய நிலைக்கு மாறிய நடிகை நமீதா! வைரலாகும் தற்போதைய புகைப்படம்.

Summary:

Nameetha fat to slim look back photos

நடிகர் சரத்குமார் நடிப்பில் வெளியான ஏய் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் நமீதா. வந்த வேகத்தில் தமிழ் சினிமா ரசிகர்களின் மனதை கவர்ந்து பிரபலமானார். ஏய் படத்தை அடுத்து எங்கள் அண்ணா, பில்லா, அழகிய தமிழ்மகன் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்தார்.

தமிழ் மட்டும் இல்லது தெலுங்கு, மலையாள திரை உலகிலும் பிரபலமான இவர் உடல் எடை அதிகரிப்பால் வாய்ப்புகள் இல்லாமல் தடுமாறினார். இந்நிலையில்தான் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றார். அந்த நிகழ்ச்சியும் இவருக்கு மேலும் புகழை தேடி தந்தது.

பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்து வெளியே வந்த கையோடு திருமணம் செய்துகொண்ட நடிகை நமீதா தற்போது தனது தீவிர உடற்பயிற்சி மூலம் தனது உடல் எடையை குறைத்து மீண்டும் பழைய தோற்றத்திற்கு மாறியுள்ளார். தனது தற்போதைய புகைப்படங்களை நமீதா சமூக வலைத்தளத்தில் வெளியிட தற்போது அந்த புகைப்படங்கள் வைரலாக பரவிவருகிறது.


Advertisement