வாவ்.. சுத்தி போடணும்! முதன்முறையாக தனது மகன்களுடன் க்யூட்டான வீடியோவை பகிர்ந்த நடிகை நமீதா.! குவியும் லைக்ஸ்கள்!!

வாவ்.. சுத்தி போடணும்! முதன்முறையாக தனது மகன்களுடன் க்யூட்டான வீடியோவை பகிர்ந்த நடிகை நமீதா.! குவியும் லைக்ஸ்கள்!!


Nameetha eith her sons cute video viral

தமிழில் கடந்த 2004 ஆம் ஆண்டு வெளிவந்த `எங்கள் அண்ணா' என்ற படத்தில் நடித்ததன் மூலம்  அறிமுகமானவர் நடிகை நமீதா. அதனை தொடர்ந்து அவர் முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து பல படங்களில் நடித்துள்ளார். மேலும் இவர் கவர்ச்சிக்கு பஞ்சமில்லாமல் பல படங்களில் துணை கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளார்.

மச்சான்ஸ் என ரசிகர்களை செல்லமாக அழைக்கும் இவருக்கென ஏராளமான ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. அதனை தொடர்ந்து படவாய்ப்புகள் இல்லாமல் இருந்த நமீதா பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். இந்நிலையில் அவர் கடந்த 2017-ம் ஆண்டு அவருடைய காதலரான வீரேந்திர சவுத்ரியை திருமணம் செய்து கொண்டார்.

அவர்களுக்கு அண்மையில் அழகிய இரட்டை குழந்தை பிறந்துள்ளது. இதனை நமீதா மிகவும் ஹேப்பியாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். இந்த நிலையில் தற்போது அவர் தனது குழந்தைகளுடன் போட்டோஷூட் நடத்தியுள்ளார். அப்பொழுது எடுத்த வீடியோவை தனது சமூக வலைத்தளபக்கத்தில் பகிர்ந்த நிலையில் அது வைரலாகி லைக்ஸ்களை குவித்து வருகிறது. அந்த வீடியோவில் அம்மாவாக நமீதாவின் முகத்தில் எல்லையற்ற சந்தோசத்தை கண்ட ரசிகர்கள் வாழ்த்தி வருகின்றனர்.