புஷ்பா 2 எப்படி? புளூ சட்டை மாறன் விமர்சனம் இதோ.. பாராட்டு., பன்ச்.. என்டில் ட்விஸ்ட்.!
வாவ்.. சூப்பர்! சீரும் சிறப்புமாக நடந்த நடிகை நமீதா வளைகாப்பு விழா!! வைரலாகும் புகைப்படங்கள்!!
தமிழ் சினிமாவில் 2004 ஆம் ஆண்டு விஜயகாந்த் நடிப்பில் வெளிவந்த எங்கள் அண்ணா படத்தில் ஹீரோயினாக நடித்து அறிமுகமானவர் நடிகை நமீதா. இவர் முதல் படத்திலேயே அனைவரையும் கவர்ந்தார். பின்னர் நமீதா அஜித், விஜய், சரத்குமார், சத்யராஜ் என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார்.
தனது எல்லையில்லா கவர்ச்சியால் ரசிகர்களை கட்டியிழுத்த அவருக்கு, பின்னர் உடல் எடை அதிகரித்ததால் பட வாய்ப்புகள் குறைந்தது. அதனைத் தொடர்ந்து நமீதா விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அதனைத் தொடர்ந்து அவர் காதலர் வீரேந்திராவை திருமணம் செய்து கொண்டு செட்டிலானார்.
இந்த நிலையில் 41 வயது நிறைந்த நமீதா சமீபத்தில் தான் கர்ப்பமாக இருக்கும் சந்தோஷமான செய்தியை ரசிகர்களிடம் பகிர்ந்து கொண்டார். மேலும் நிறைமாத கர்ப்பிணியான போட்டோ ஷூட் புகைப்படங்களையும் வெளியிட்டார். இந்த நிலையில் அவருக்கு மிகவும் சீரும் சிறப்புமாக வளைகாப்பு விழா நடைபெற்று உள்ளது. அந்தப் புகைப்படங்கள் இணையத்தில் வைரலான நிலையில் பலரும் அவருக்கு வாழ்த்துக் கூறி வருகின்றனர்.