சினிமா

இதெல்லாம் வதந்தி! சமந்தா- நாகசைதன்யா விவாகரத்து சர்ச்சை! கொதித்தெழுந்த நாகார்ஜூனா!!

Summary:

இதெல்லாம் வதந்தி! சமந்தா- நாகசைதன்யா விவாகரத்து சர்ச்சை! கொதித்தெழுந்த நாகார்ஜூனா!!

தமிழ் சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை சமந்தா. அவர் கடந்த 2017 ஆம் ஆண்டு பிரபல தெலுங்கு நடிகரும், முன்னணி நடிகர் நாகார்ஜுனாவின் மகனுமான நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் இருவரும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தாங்கள் விவாகரத்து பெற்று பிரியபோவதாக அறிவித்தனர்.

இது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் அண்மையில் நாக சைதன்யா பேட்டி ஒன்றில் எனக்கு ஏற்ற ஜோடி சமந்தாதான் என கூறியிருந்தார். மேலும் சமந்தாவும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்த விவாகரத்து தொடர்பான பதிவை நீக்கி இருந்தார். இந்த நிலையில் அவர்கள் இருவரும் மீண்டும் இணையவுள்ளதாக பேச்சு அடிபடத் தொடங்கியது.

இதற்கிடையில் விவாகரத்து முடிவை முதலில் சமந்தாதான் எடுத்தார், அதன் பிறகு அதற்கு நாக சைதன்யா ஒத்துக் கொண்டார் என நாகார்ஜுனா கூறியதாக செய்திகள் வெளியானது. இந்நிலையில் இதுகுறித்து விளக்கமளித்து நாகார்ஜுனா டிவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர், சமந்தா மற்றும் நாகசைதன்யா குறித்த எனது அறிக்கையை மேற்கோள்காட்டி சமூக ஊடகங்கள் மற்றும் மின்னணு ஊடகங்களில் பரவி வரும் செய்திகள் முற்றிலும் தவறானவை மேலும் முற்றிலும் முட்டாள்தனம். வதந்திகளை செய்தியாக வெளியிடுவதைத் தவிர்க்குமாறு ஊடக நண்பர்களைக் கேட்டுக்கொள்கிறேன் என அவர் கூறியுள்ளார்.

 


Advertisement