சினிமா

என்னா மனசு சார் உங்களுக்கு.. சமந்தா குறித்து மாமனார் நாகார்ஜூனா சொன்ன ஒத்த வார்த்தை! குவியும் பாராட்டுகள்!!

Summary:

ப்பா.. பெரிய மனசுதான்! சமந்தா குறித்து மாமனார் நாகார்ஜூனா சொன்ன வார்த்தை! குவியும் பாராட்டு!!

தமிழ் சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து  டாப் ஹீரோயின்களில் ஒருவராக இருப்பவர் நடிகை சமந்தா. அவர் தற்போது விஜய் சேதுபதி மற்றும் நயன்தாராவுடன் இணைந்து காத்துவாக்குல ரெண்டு காதல், சாகுந்தலம் போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார். தெலுங்கு சினிமாவிலும் ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ள சமந்தா கடந்த 2017ஆம் ஆண்டு தெலுங்கு நடிகரும், முன்னணி நடிகர் நாகார்ஜுனாவின் மகனுமான நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

அதனைத் தொடர்ந்து நட்சத்திர ஜோடிகளாக விளங்கி வந்த அவர்கள் இருவரும் அண்மையில் விவாகரத்து பெற்று பிரிய போவதாக அறிவித்தனர். இந்நிலையில் சமீபத்தில் பேட்டியளித்த நடிகர் நாகார்ஜுனா இதுகுறித்து கூறுகையில், நடிகை சமந்தா மிக வேகமாக எங்களது குடும்பத்துடன் இணைந்து விட்டார். எல்லோரிடமும் மிகவும் ஜாலியாக இருப்பார்.

அவர் எங்களுக்கு மருமகளாக இல்லாமல் ஒரு மகள் போல இருந்தார். ஆனால் சமந்தா மற்றும் சைதன்யா இருவரும் பிரிவார்கள் என கனவில் கூட நினைத்ததில்லை. இருவரும் விட்டுக்கொடுத்து போயிருந்தால் மிகவும் நன்றாக இருந்திருக்கும். சமந்தா எங்களுடன் சேர்ந்து இல்லாவிட்டாலும் அவர் எப்பொழுதும் எனது மகள்தான். அவர் சினிமாவில் மேன்மேலும் வளர வேண்டும் என மனதார பிரார்த்திக்கிறேன் என்று கூறியுள்ளார். இந்நிலையில் ரசிகர்கள் நாகார்ஜூனாவை பாராட்டி வருகின்றனர்.


Advertisement