ரொம்ப மனசு வலிக்குது.. சமந்தாவுடன் விவாகரத்தா? முதன்முறையாக மௌனம் கலைத்த நடிகர் நாக சைதன்யா!!

ரொம்ப மனசு வலிக்குது.. சமந்தாவுடன் விவாகரத்தா? முதன்முறையாக மௌனம் கலைத்த நடிகர் நாக சைதன்யா!!


naga chaithanya speak about divorce with samantha

தமிழ் சினிமாவில் பல உச்ச நட்சத்திரங்களுடன் இணைந்து ஏராளமான சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்ததன் மூலம் தற்போது முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தெலுங்கில் முன்னணி நடிகரும், நடிகர் நாகார்ஜுனாவின் மகனுமான நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

இந்த நிலையில் அவர் திருமணத்திற்கு பிறகும் மார்க்கெட் குறையாமல் தொடர்ந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்து வருகிறார். இதற்கிடையில் சமீபகாலமாக சமந்தா மற்றும் நாகசைதன்யா இருவரும் விவாகரத்து செய்து பிரிய போவதாக இணையத்தில் தகவல்கள் பரவி வந்தது. ஆனால் இதுகுறித்து இருவர் தரப்பிலும் எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை.

naga chaithanya

இந்த நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், நான் சிறுவயதிலிருந்தே சினிமா வேறு, தனிப்பட்ட வாழ்க்கை வேறு என  வளர்ந்தவன். இந்தப் பழக்கம் எனது தாய் தந்தையரிடம் இருந்து எனக்கு வந்தது. அவர்கள் சூட்டிங் முடிந்து வீட்டிற்கு வந்த பிறகு சினிமா பற்றி எதுவும் பேச மாட்டார்கள். நானும் அதையே கடைப்பிடித்து வந்தேன்.

ஆனால் தற்போது சமந்தாவுடன் விவாகரத்து என்று பரவி வரும் செய்தி மிகுந்த வேதனை அளிக்கிறது. தற்போதைய காலகட்டத்தில் ஒரு செய்தியை மறக்கடிக்க உடனே இன்னொரு செய்தி உடனே வந்து விடுகிறது. இதுகுறித்து எனக்கு புரிய வந்த நிலையில் நானும் கவலைப்படுவதே நிறுத்தி விட்டேன் என கூறியுள்ளார்.