விரைவில் வருகிறது நடிகர்சங்க தேர்தல்?. யாரெல்லாம் போட்டியிடப்போறாங்க தெரியுமா?

விரைவில் வருகிறது நடிகர்சங்க தேர்தல்?. யாரெல்லாம் போட்டியிடப்போறாங்க தெரியுமா?


Nadikar sanga election postponed for next six months

 நடிகர் சங்கத்தின் தலைவர் நாசர் தலைமையில் இன்று மதியம் 2 மணிக்கு சென்னை கலைவாணர் அரங்கில், தென்னிந்திய நடிகர் சங்க பொதுக்குழு கூட்டம் நடக்கிறது
இந்த பொதுக்குழு கூட்டத்தில், நடிகர் சங்கத்தின் செயல்பாடுகள் குறித்தும், நடிகர் சங்கத்தின் வரவு செலவு கணக்குகளும் தாக்கல் செய்யப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த கூட்டத்தில், நவம்பர் மாதம் நடிகர் சங்கத்துக்கு தேர்தல் நடத்தப்பட வேண்டும். ஆனால் நடிகர் சங்க கட்டிடம் கட்டும் பணி நடைபெறுவதால், தேர்தல் தள்ளிவைக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது. 

Nadigar sangam

தேர்தல் தள்ளிவைக்க முடிவு எடுக்கப்பட்டால், அதிருப்தியாளர்கள் தேர்தலை குறிப்பிட்ட தேதியில் நடத்த வேண்டும் கோரிக்கை வைக்க வாய்ப்புள்ளதாகவும் தெரிகிறது.

இந்நிலையில், இந்த பொதுக்குழு கூட்டத்தில் மறைந்த திமுக தலைவர் கருணாநிதி உருவப்படத்திற்கு, நடிகர் சங்க பொதுக்குழு கூட்டத்தில் மலர் தூவி அஞ்சலி செலுத்தபட்டது.பின், நடிகர் சங்கத் தேர்தலை 06 மாதத்திற்கு ஒத்திவைப்பதாக முடிவு செய்யப்பட்டுள்ளது. 

வரும் தேர்தலில், விஷால் அணி மீண்டும் களம் இறங்கினால், அவர்களுக்கு எதிராக டி.ராஜேந்தர், ராதாரவி, ஜே.கே.ரித்திஷ் உள்ளிட்டோர் அடங்கிய அணி களம் இறங்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த கூட்டத்திற்காக சினிமா படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.