"எனக்கு இளையராஜா வாய்ப்பு தரவில்லை" இசையமைப்பாளர் பரணி ஓபன் டாக்.!

தமிழ் திரையுலகில் இசை ஞானி என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்படுபவர் இளையராஜா. பட்டி தொட்டியெங்கும் இளையராஜாவின் பாடல்கள் ஒலிக்காத இடங்களே இல்லை எனலாம். அந்த அளவுக்கு எங்கும், எதிலும் இவரது இசை கலந்திருக்கும்.
அதேசமயம், இளையராஜாவின் மீது சமீபகாலமாக ஏராளமான புகார்களும் எழுந்தவண்ணம் உள்ளன. இளையராஜா யாரையும் மதிப்பது கிடையாது. அவருக்கு தான் என்றொரு கர்வம், தலைக்கனம் எப்போதும் உண்டு என்று பலரும் கூறி வருகின்றனர்.
இந்நிலையில், இளையராஜாவிடம் 5 வருடங்கள் உதவியாளராக பணிபுரிந்தவர் இசையமைப்பாளர் பரணி. இவர் சமீபத்தில் ஒரு பேட்டியளித்திருந்தார். அதில் பரணி இளையராஜாவை பற்றி பேசியிருந்தார். "எம் எஸ் வி ஒருமுறை என்னைப் பார்த்தபோது, உங்கள் பாடல் நன்றாக இருக்கிறது என்று பாராட்டினார்.
ஏ.ஆர். ரஹ்மான் என்னை அழைத்து வாய்ப்பு கொடுத்தார். நான் உங்களை அழைப்பேன் என்று கூறினார். ஆனால் இளையராஜாவுக்கு அந்த மனம் கொஞ்சமும் இல்லை. ஒருமுறை கூட அவர் என்னை பாராட்டியதில்லை. 5வருடங்கள் நான் இளையராஜாவிடம் பணியாற்றினேன்" என்று பரணி கூறினார்.