சினிமா

37 வருடங்களுக்கு பின் உருவாகும் முருங்கைக்காய் சமாச்சார பட ரீமேக்! இயக்குனர் யார் தெரியுமா?

Summary:

1983 ஆம் ஆண்டில் ஏவிஎம் நிறுவனத்தின் தயாரிப்பில் வெளியாகி பிளாக்பஸ்டர் அடித்த மெகாஹிட் திர

1983 ஆம் ஆண்டில் ஏவிஎம் நிறுவனத்தின் தயாரிப்பில் வெளியாகி பிளாக்பஸ்டர் அடித்த மெகாஹிட் திரைப்படம் முந்தானை முடிச்சு. பாக்யராஜ் இயக்கி நடித்த இத்திரைப்படத்தில் ஊர்வசி, பூர்ணிமா பாக்யராஜ், கே.கே.சௌந்தர், தவக்களை சிட்டிபாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இத்திரைப்படம் ரசிகர்களை பெருமளவில் கவர்ந்தது.

சூப்பர் ஹிட்டான இந்த திரைப்படம் மீண்டும் 37 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது ரீமேக் செய்யப்படவுள்ளது. இந்தப்படத்தில் ஹீரோவாக சசிகுமார் மற்றும் ஹீரோயினாக ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் நடிக்கவுள்ளனர். மேலும் இந்த படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் போன்றவற்றிற்கு பாக்யராஜ் பொறுப்பேற்றுள்ளார்.

இந்த நிலையில் இப்படத்தின் இயக்குனர் யாரென ரசிகர்களிடையே பெரும் ஆர்வம் இருந்துவந்த நிலையில் சுந்தரபாண்டியன் படத்தை இயக்குனர் எஸ்.ஆர் பிரபாகரன் என்பவர் இயக்குவதாக அதிகாரபூர்வ அறிவிப்புகள் வெளிவந்துள்ளது. எஸ்ஆர் பிரபாகரன் மற்றும் சசிகுமார் கூட்டணியில் ஏற்கனவே கொம்பு வச்ச சிங்கம்டா என்ற திரைப்படம் உருவாகி ரிலீசுக்கு தயாராக உள்ளது.
 


Advertisement