தளபதி 69 படத்தில் விஜய்க்கு ஜோடி இவரா? அப்செட்டில் ரசிகர்கள்!
மூன்றாம் திருமண சர்ச்சையால் பிக்பாஸ் வனிதாவுக்கு கிடைத்த அதிர்ஷ்டம்.!உச்சக்கட்ட மகிழ்ச்சியில் வனிதா வெளியிட்ட பதிவு.
பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் நீண்ட நாட்களுக்கு பிறகு பிரபலமானவர் வனிதா. அந்த நிகழ்ச்சியை தொடர்ந்து குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு முதல் பரிசை தட்டி சென்றார்.
அதன்பிறகு தனியாக யூடியூப் சானல் ஒன்றை தொடங்கி மக்கள் மத்தியில் இன்னும் பிரபலமானார். வனிதா இதற்கு முன்பு பல சர்ச்சையில் சிக்கியதை போன்று தற்போது தனது மூன்றாம் திருமணத்தின் மூலம் மீண்டும் சர்ச்சையில் சிக்கினார். இந்நிலையில் தற்போது மூன்றாம் திருமண சர்ச்சையின் மூலம் தனக்கு அதிர்ஷ்டம் கிடைத்துள்ளதாக கூறியுள்ளார்.
அதாவது மூன்றாம் திருமண சர்ச்சையால் தனது யூடியூப் சேனலின் பார்வையாளர்கள் அதிகரித்து விட்டதாகவும், மேலும் தற்போது தான் அவருக்கு ரசிகர்கள் ஆதாரவாக உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும் எந்தவித எதிர்ப்புகள் வந்தாலும் தான் அடுத்த கட்டத்தினை நோக்கி நகர்ந்து கொண்டிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.