"சினிமாவில் உருவகேலி என்பது சாதாரணமாகிவிட்டது" எம். எஸ். பாஸ்கர் பேட்டி!

"சினிமாவில் உருவகேலி என்பது சாதாரணமாகிவிட்டது" எம். எஸ். பாஸ்கர் பேட்டி!



ms-basker-talked-about-body-shaming

திரையுலகில் நுழைவதற்கு முன்பு நாடகக்  கலைஞராக இருந்தவர் எம். எஸ். பாஸ்கர். 1987ம் ஆண்டு "திருமதி ஒரு வெகுமதி" படத்தில் ஒரு சிறிய கேரக்டரில் அறிமுகமானார். இதையடுத்து மக்கள் என் பக்கம், சேலம் விஷ்ணு, காதல் கீதம், கன்னத்தில் முத்தமிட்டால் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

MS Basker

நடிப்பதோடு மட்டுமல்லாமல், பின்னணி குரல் கொடுப்பவராகவும் இருக்கும் எம். எஸ். பாஸ்கர், நடிகர்கள் பிரம்மானந்தம், கலாபவன் மணி உள்ளிட்ட பலருக்கு பின்னணிக் குரல் கொடுத்துள்ளார். மேலும் சில தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்துள்ளார்.

குறிப்பாக சின்ன பாப்பா பெரிய பாப்பா என்ற நகைச்சுவைத் தொடரின் மூலம் மிகவும் பிரபலமானார் எம். எஸ். பாஸ்கர். தற்போது "மதிமாறன்" என்ற திரில்லர் படத்தில் நடித்துள்ள இவர், சமீபத்தில் இப்படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டார்.

MS Basker

அதில் அவர் பேசும்போது, "இந்தப் படத்தின் கதையைக் கேட்டபோதே எனக்குப் பிடித்திருந்தது. என்னை மிகவும் கலங்க வைத்த படம் இது. படத்தில் ஹீரோ மிக அற்புதமாக நடித்துள்ளார். உயரத்தில் என்ன இருக்கிறது? எனக்கே முடி கொட்டியபிறகு தான் வாய்ப்புகள் கிடைத்தன. சினிமாவில் உருவ கேலி என்பது சாதாரணமாகிவிட்டது" என்று கூறியுள்ளார்.