BREAKING: மீண்டும் மீண்டுமா.... ஜனநாயகன் பட வழக்கில் உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!
"படக்குழுவிற்கு நன்றி தெரிவித்து உருக்கமாக பதிவிட்டுள்ள நடிகை!"
முதன் முதலில் ஹிந்தித் தொலைகாட்சித் தொடர்களில் நடிகையாக அறிமுகமானவர் மிருனாள் தாகூர். 2014 முதல் 2016ஆம் ஆண்டு ஒளிபரப்பான "கும் கும் பாக்யா" தொடர் மூலம் பிரபலமானார். தொடர்ந்து ஹிந்தி மற்றும் தெலுங்குப் படங்களில் நடித்து வருகிறார் .

2022ம் ஆண்டு தெலுங்கில் துல்கர் சல்மானுடன் இவர் நடித்த "சீதா ராமம்" படத்தில் இவரது கதாப்பாத்திரம் மிகவும் பேசப்பட்டது. அந்தப் படத்தின் மூலம் மிகப் பிரபலமடைந்த நடிகைக்கு தொடர்ந்து வாய்ப்புகள் வந்தவண்ணம் உள்ளன.
இதனிடையே இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் மிருனாள் தாகூர், தனது புகைப்படங்களையும், படத்தின் ப்ரமோஷன் வீடியோக்களையும் அவ்வப்போது வெளியிட்டு வருவார். அந்தவகையில் கடந்த வாரம் வெளியான "பிப்பா" திரைப்படத்தின் ஸ்டில்களை பதிவிட்டுள்ளார் மிருனாள் தாகூர்.

மேலும் அதனுடன் படப்பிடிப்பின் போது எடுத்த புகைப்படங்களையும் இணைத்து, "அன்பு நிறைந்த பிப்பா படக்குழுவினருக்கு, நீங்கள் மிகவும் சிறந்தவர்கள். இந்தப் பயணத்தை மிக சிறப்பாகவும், மறக்கமுடியாததாகவும் மாற்றியதற்கு படக்குழுவிற்கு நன்றி" என்று உருக்கமாக பதிவிட்டுள்ளார்.