அடேங்கப்பா..பாரதிகண்ணம்மா வில்லி வெண்பாவிற்கு கணவர் கொடுத்த சர்ப்ரைஸ்! செம ஹேப்பியில் அம்மணி!! வீடியோ..mr-and-mrs-chinnathirai-promo-viral-N2RDZA

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்களை பெருமளவில் கவர்ந்த நிகழ்ச்சிகள் ஏராளம். அவ்வாறு மக்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்ற நிகழ்ச்சிகளில் ஒன்றுதான் மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை. இதில் சின்னத்திரை பிரபலங்கள் சிலர் தங்களது வாழ்க்கை துணையோடு கலந்துகொண்டு போட்டிகளில் பங்கேற்றுள்ளனர்.

இந்த நிலையில் தற்போது விஜய் டிவியில் மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை சீசன் 4 நடைபெற்று வருகிறது. இதில் பாரதிகண்ணம்மா தொடரில் வில்லியாக வெண்பா கதாபாத்திரத்தில் நடித்து அனைவரையும் மிரள வைத்து வரும் பரினா தனது கணவர் உபைத் ரஹ்மானுடன் கலந்து கொண்டுள்ளார். இவர்கள் இருவரும் போட்டிகளில் சிறப்பாக பங்கேற்று முன்னேறிச் செல்வர் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் இந்த வாரம் மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை நடுக்கடலில் கப்பலில் நடைபெற்று வருகிறது. அதில் கணவர்மார்கள் தங்களது மனைவிக்கு சர்ப்ரைஸ் கிப்ட் கொடுத்து வருகின்றனர். அவ்வாறு உபைத் ரஹ்மானும் பரினாவிற்கு அசத்தலாக கிப்ட் கொடுத்து இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார். அந்த வீடியோ வைரலாகி வருகிறது.