சினிமா

96 படத்தின் தெலுங்கு ரீமேக் பட டைட்டில் இதுதானா? கசிந்த தகவலால் உற்சாகத்தில் ரசிகர்கள்.!

Summary:

movie name of 96 in telungu

தமிழில் பிரேம் குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி மற்றும் த்ரிஷா நடிப்பில் வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வெற்றியை பெற்ற படம் 96. காதலை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்தப் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

இதனைத்தொடர்ந்து இப்படம் கன்னடம், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட பல மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகின. 

அதனை தொடர்ந்து 96 படத்தின் தெலுங்கு ரீமேக்கில் ஷர்வானந்த் மற்றும் சமந்தா ஆகியோர் நடிக்கஉள்ளதாக அதிகாரப்பூர்வ போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. தமிழில் 96 படத்தை இயக்கிய பிரேம் குமார் தெலுங்கிலும் இயக்குகிறார்.இந்தப் படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.இந்நிலையில் தெலுங்கு ரீமேக் படத்திற்கு ஜானகி தேவி என பெயரிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் இதன் அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் கூறப்படுகிறது.


Advertisement