Eeramaana Rojaavey 2: விஜய் டிவி ஈரமான ரோஜாவே 2 சீரியல் நேரம் மாற்றம் - அதிகாரபூர்வ அறிவிப்பு.!
அடிப்பாவி மகளே..எப்படி மனசு வந்துச்சு! கள்ளக்காதல் மோகத்தால் இரக்கமே இல்லாமல் தாய் செய்த கொடூர காரியம்!
அடிப்பாவி மகளே..எப்படி மனசு வந்துச்சு! கள்ளக்காதல் மோகத்தால் இரக்கமே இல்லாமல் தாய் செய்த கொடூர காரியம்!
கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் குளக்கச்சி பகுதியில் வசித்து வருபவர் ஜெகதீஷ். அவரது மனைவி கார்த்திகா. இவர்களுக்கு 3 வயதில் சஞ்சனா என்ற மகளும், ஒன்றரை வயதில் சரண் என்ற மகனும் இருந்துள்ளனர். இந்நிலையில் விளையாடி கொண்டிருந்த சரண் விஷப்பொடியை சாப்பிட்டுவிட்டதாக கார்த்திகா வேலைக்கு சென்ற தனது கணவரிடம் கூறியுள்ளார்.
இதனை கேட்டு பதறி துடித்து வீட்டுக்கு வந்த ஜெகதீஷ் குழந்தை சரணை தூக்கிகொண்டு மருத்துவமனைக்கு ஓடியுள்ளார்.அங்கு குழந்தையை பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். மேலும் மகள் சஞ்சனாவிற்கும் உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் இதுகுறித்து சந்தேகமடைந்து போலீசார்கள் விசாரணை மேற்கொண்டபோது பல அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளிவந்துள்ளது.
அதாவது கார்த்திகாவிற்கு மாரயபுரம் பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவருடன் பழக்கம் இருந்துள்ளது. கார்த்திகாவிற்கு திருமணமாகி குழந்தைகள் இருப்பது தெரியாமல் பழகி வந்த அந்த இளைஞர் விவரம் தெரிந்ததும் கார்த்திகாவிடம் பேசுவதை நிறுத்தியுள்ளார். இந்நிலையில் அந்த இளைஞர் மீது கொண்ட காதலால், அதற்கு குழந்தைகள் இடையூறாக இருப்பதாக எண்ணி கார்த்திகா அவர்களுக்கு உப்புமாவில் எலி பேஸ்ட் கலந்து கொடுத்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.