தமிழகம் காதல் – உறவுகள்

பிறந்த குழந்தையின் முகஜாடையை கண்டு பேரதிர்ச்சி.! தாய் செய்த கொடூரத்தால் ஆடிப்போன குடும்பத்தார்கள்!!

Summary:

mother kiled infant baby for illegal relationship

திருவண்ணாமலை மாவட்டம் சேவூர் பகுதியில் வசித்து வருபவர் குமார். இவரது மனைவி சோலையம்மாள். இந்த தம்பதியினருக்கு ஏற்கனவே 4 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் சோலையம்மாள் மீண்டும் 5வது முறையாக கர்ப்பமாகியுள்ளார்.

இந்நிலையில் அவருக்கு கடந்த ஒரு சில வாரங்களுக்கு முன்பு ஆரணி அரசு பொது மருத்துவமனையில் குழந்தை பிறந்தது. அதனை தொடர்ந்து குழந்தை பிறந்த இருநாளிலேயே  சோலையம்மாள் குழந்தையுடன் மாயமாகி போனார்.

இந்நிலையில் குழந்தையுடன் தாய் மாயமானதால் அதிர்ச்சியடைந்த மருத்துவமனை நிர்வாகிகள் இதுதொடர்பாக காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். மேலும் புகாரை ஏற்றுக்கொண்ட காவல்துறையினர் சோலையம்மாவை தீவிரமாக தேடி வந்தனர். அதனை தொடர்ந்து சோலையம்மாள் சென்னையில் இருப்பதை அறிந்து கொண்ட காவல்துறையினர் அவரை தேடி கண்டுபிடித்தனர். பின்னர் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

illegal affairs க்கான பட முடிவு

அப்பொழுது சோலையம்மாள், தனக்கு குமாரின் சகோதரரான பாபு என்பவருக்கும்  தகாத உறவு இருந்ததாகவும், அந்த உறவின் மூலமே  தனக்கு 5வது குழந்தை பிறந்ததாகவும் கூறினார். மேலும் பிறந்த குழந்தை பாபுவின் ஜாடையிலில் இருந்துள்ளது. அதனை கண்ட சோலையம்மாள் பயந்துபோய் இதுகுறித்து பாபுவிடம் கூறியுள்ளார். 

இதனை தொடர்ந்து சோலையம்மா மற்றும் பாபு இருவரும் இணைந்து குழந்தையை கொன்று விட முடிவு செய்துள்ளனர். அதனை தொடர்ந்து மருத்துவமனையிலிருந்து வெளியேறிய சோலையம்மாள் சேவூர் கிராமத்தில் உள்ள ஒரு முட்புதரில் குழந்தையின் கழுத்தை நெரித்து, மூச்சு திணறடித்து கொலை செய்து அங்கேயே புதைத்ததாக கூறியுள்ளார்

அதனை தொடர்ந்து காவல்துறையினர் அவர்கள் கூறிய இடத்திற்கு சென்று புதைந்திருந்த குழந்தையின் சடலத்தை மீட்டு எடுத்தனர். பின்னர் குழந்தையை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 


Advertisement