ஆதிபுருஷ் படம் பார்க்க அனுமனே வந்துவிட்டார்.! ஜெய் ஸ்ரீராம் என ரசிகர்கள் ஆரவாரம்! வைரல் வீடியோ!!Monkey came theatre to watch aadhipurush movie viral video

இயக்குனர் ஓம் ராவத் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ஆதிபுருஷ். ராமாயண கதையை மையமாக வைத்து தயாராகியுள்ள இந்த திரைப்படத்தில் ராமராக பிரபல தெலுங்கு நடிகர் பிரபாஸ் நடித்துள்ளார். மேலும் ராவணனாக சயீப் அலிகான், சீதையாக கீர்த்தி சனோன் ஆகியோர் நடித்துள்ளனர்.

பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இந்த படத்தை டி சீரிஸ் மற்றும் ரெட்ரோ பைல்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளனர். ஆதிபுருஷ் திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் பான் இந்தியா திரைப்படமாக 3டி தொழில்நுட்பத்தில் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.  பல சர்ச்சைகளுக்கும், விமர்சனங்களுக்கும் இடையே வெளிவந்த இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தையே பெற்று வருகிறது.

இந்நிலையில் திரையரங்கில் ஆதிபுருஷ் திரைப்படம் ஓடிக்கொண்டிருக்கும்போது திரையரங்கிற்குள் குரங்கு வந்து திரையை நோக்கி பார்த்துக் கொண்டு இருந்துள்ளது. இதனைக் கண்ட ரசிகர்கள் ஆதிபுருஷ் திரைப்படத்திற்கு ஆசி வழங்க அனுமனே வந்துவிட்டதாக ஜெய் ஸ்ரீ ராம் என முழங்கி ஆரவாரம் செய்துள்ளனர். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.