நடிகர் மங்கலநாத குருக்கள் இறந்துவிட்டதாக கூறி மோசடி.! மங்கலநாத குருக்கள் அதிர்ச்சி புகார்.!

நடிகர் மங்கலநாத குருக்கள் இறந்துவிட்டதாக கூறி மோசடி.! மங்கலநாத குருக்கள் அதிர்ச்சி புகார்.!


Money laundering claiming the actor is dead

தமிழ் சினிமா மற்றும் சின்னத்திரையில் கோவில் குருக்கலாக நடித்து பிரபலமானவர் மங்கலநாத குருக்கள். அவர் நிஜத்திலேயே குருக்கள் தான் என்பதால் அவர் சினிமா பூஜை, நிகழ்ச்சிகள் என அனைத்து விதமான பூஜைகளிலும் பங்கேற்று வருகிறார். இந்தநிலையில், அவரும், அவரது குடும்பத்தினரும் இறந்துவிட்டார்கள் என்று சிலர் பொய்யான தகவலை பரப்பியுள்ளனர்.

மேலும் அவர்களது இறுதி சடங்கிற்கு கூட பணம் இல்லை என கூறி சிலர் பிரபலங்களிடம் பணம் வாங்கவும் செய்ததாக கூறப்படுகிறது. இந்த மோசடி பற்றி மங்கலநாத குருக்களுக்கு தெரியவர, அவர் காவல்நிலையத்தில் இது தொடர்பாக புகார் அளித்துள்ளார்.

mangalanadha gurukkal

அவர் அளித்த புகாரில், சிலர் தாம் இறந்துவிட்டதாக கூறி பணம் வசூலிக்கின்றனர் என்றும், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.