பிக்பாஸ் டஃப் போட்டியாளரின் ரசிகர்கள் மீது அதிரடி புகாரளித்த பிரபல நடிகை! எதனால்? என்ன நடந்தது தெரியுமா?

பிக்பாஸ் டஃப் போட்டியாளரின் ரசிகர்கள் மீது அதிரடி புகாரளித்த பிரபல நடிகை! எதனால்? என்ன நடந்தது தெரியுமா?


monal-kajjar-complaint-against-telungu-bigboss-contesta

தமிழ் சினிமாவில் சிகரம் தொடு, வானவராயன் வல்லவராயன் உள்ளிட்ட படங்களில் கதாநாயகியாக நடித்ததன் மூலம் ரசிகர்களிடையே பிரபலமானவர் மோனல் கஜ்ஜார். அவருக்கு சமீபகாலமாக சரியான பட வாய்ப்புகள் எதுவும் கிடைக்காத நிலையில் அவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தெலுங்கில் ஆரம்பமான பிக்பாஸ் சீசன் 4ல் போட்டியாளராக கலந்து கொண்டார். இவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார்.

தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சி துவங்கப்பட்ட ஆரம்பத்தில் மோனல் கஜ்ஜார் மீது சக போட்டியாளர்களான அபிஜித் மற்றும் அகில் ஆகியோருக்கிடையே முக்கோண காதல் ஏற்பட்டது. ஆனால் நாளடைவில் மோனலுக்கும், அபிஜித்திற்க்கும் இடையே மோதல் ஏற்பட்டநிலையில் அபிஜித்தின் ரசிகர்கள் மோனலை மோசமாக விமர்சிக்க துவங்கினர். மேலும் மோனலின் சகோதரியும் அபிஜித்தையும் அவரது ரசிகர்களையும் எச்சரித்து பேட்டி ஒன்றில் பேசியிருந்தார். அதனைத் தொடர்ந்து அபிஜித் ரசிகர்களின் விமர்சனங்கள் எல்லை மீறியது.

abi jith

இந்த நிலையில் தன்னை அவதூறான வார்த்தைகளால் விமர்சிப்பதாக தெலுங்கு பிக்பாஸ் சீசன் 4ல் டைட்டில் வின்னராக வருவார் என எதிர்பார்க்கப்படுகிற அபிஜித்தின் ரசிகர்கள் மீது மோனல் கஜ்ஜார் தனது குடும்பத்துடன் சைபர் க்ரைம் போலீசில் புகார் அளித்துள்ளார்.