உடல் மெலிந்து அடையாளமே தெரியாமல் மாறிய பிரபல நடிகர்! கண்கலங்கி முத்தமிட்ட மோகன்லால்! வைரல் புகைப்படம்!!

உடல் மெலிந்து அடையாளமே தெரியாமல் மாறிய பிரபல நடிகர்! கண்கலங்கி முத்தமிட்ட மோகன்லால்! வைரல் புகைப்படம்!!


Mohanlal kiss to actor seenivasan photo viral

மலையாள சினிமாவில் கடந்த 40 ஆண்டுகளாக பல முன்னணி நடிகர்களின் படங்களில் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று பிரபலமானவர் நடிகர் ஸ்ரீனிவாசன். அவர் நடிகர் மட்டுமின்றி கதாசிரியர், இயக்குனர், பாடலாசிரியர் என பன்முக திறமை கொண்டு விளங்கினார். 

நடிகர் ஸ்ரீனிவாசனுக்கு  வினீத் ஸ்ரீனிவாசன் மற்றும் தயன் ஸ்ரீனிவாசன் என இரு மகன்கள் உள்ளனர். இருவரும் மலையாளத்தில் இயக்குனராக மற்றும் நடிகராக வலம் வருகின்றனர்.நடிகர் ஸ்ரீனிவாசன் தற்போது படங்களில் பெருமளவில் நடிப்பதில்லை. இந்நிலையில் கடந்த சில மாதங்களாக அவர் உடல் நலக் குறைவால் சிரமப்பட்டு வந்துள்ளார்.

mohanlal

 மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த அவர் உடல் மெலிந்து ஆள் அடையாளமே தெரியாமல் மாறியுள்ளார். இந்நிலையில் அவர் மலையாள நடிகர் சங்க கலை நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார். அவரை மோகன்லால், மம்முட்டி இருவரும் மகிழ்ச்சியுடன் வரவேற்றனர். மேலும் ஸ்ரீனிவாசனின் மெலிந்த உடலை கண்டு மோகன்லால் கண்கலங்கி அவரை கட்டியணைதது முத்தமிட்டு தனது அன்பை வெளிப்படுத்தியுள்ளார்.