அயலி நாயகியின் அடுத்த படத்தின் ஆடியோ லான்ச்... இணையதளத்தில் ட்ரெண்டிங்கான க்யூட் வீடியோ.!
மு.க.ஸ்டாலின் நடிகர் தனுஷை பாராட்ட.. தனுஷ் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி கூற.. தேர்தல் நேரத்தில் பரபரப்பு பதிவுகள்!
மு.க.ஸ்டாலின் நடிகர் தனுஷை பாராட்ட.. தனுஷ் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி கூற.. தேர்தல் நேரத்தில் பரபரப்பு பதிவுகள்!

அசுரன் படத்திற்கு மு.க.ஸ்டாலின் பாராட்டுகளை தெரிவித்த நிலையில்,அசுரனைப் பார்த்ததற்கும் பாராட்டியதற்கும் மிக்க நன்றி என மு.க ஸ்டாலினுக்கு நடிகர் தனுஷ் நன்றி தெரிவித்து உள்ளார்.
தனுஷ் வெற்றிமாறன் கூட்டணியில் உருவாகியிருக்கும் அசுரன் படத்தில், மஞ்சு வாரியர், பசுபதி, பிரகாஷ்ராஜ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படம் திரையில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மட்டுமில்லாமல் மக்கள் மத்தியிலும் நல்ல பாராட்டை பெற்று வருகிறது. இந்தநிலையில் இந்த படத்தை பார்த்த மு.க.ஸ்டாலின் பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.
நாங்குநேரி மற்றும் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதிகளின் இடைத்தேர்தலை அடுத்து பல அரசியல் தலைவர்களும் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டுவருகின்றனர். மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் செய்து வருகிறார்.
#Asuran - படம் மட்டுமல்ல பாடம்!
— M.K.Stalin (@mkstalin) October 17, 2019
பஞ்சமி நில உரிமை மீட்பை மையமாக வைத்து சாதிய சமூகத்தைச் சாடும் - சாதி வன்மத்தை கேள்வி கேட்கும் துணிச்சல்காரன்!
கதை-களம்-வசனம் என வென்று காட்டியிருக்கும் @VetriMaaran-க்கும் வாழ்ந்து காட்டியிருக்கும் @dhanushkraja-வுக்கும் பாராட்டுகள் pic.twitter.com/i6PYyRTPfV
தேர்தல் பிரச்சாரத்திற்கிடையே, நடிகர் தனுஷ் நடித்துள்ள அசுரன் திரைப்படத்தை படத்தை பார்த்துவிட்டு அந்த படத்தை வென்று காட்டியிருக்கும் வெற்றிமாறனுக்கும் வாழ்ந்து காட்டியிருக்கும் தனுஷுக்கும் பாராட்டுகள் எனத் தெரிவித்திருந்தார்.
காலம் ஒதுக்கி
— Dhanush (@dhanushkraja) October 17, 2019
அசுரனைப் பார்த்ததற்கும்
பாராட்டியதற்கும் மிக்க நன்றி ஐயா.
பெருமகிழ்ச்சி அடைகிறோம். https://t.co/bvwtkcGWTk
மு.க. ஸ்டாலின் பாராட்டு தெரிவித்ததற்கு நடிகர் தனுஷ் அவரது ட்விட்டர் பக்கத்தில் நன்றி தெரிவித்துள்ளார். அவரது பதிவில், "காலம் ஒதுக்கி அசுரனைப் பார்த்ததற்கும் பாராட்டியதற்கும் மிக்க நன்றி ஐயா. பெருமகிழ்ச்சி அடைகிறோம் என நன்றி தெரிவித்து உள்ளார்.