நான் சாகவில்லை! உயிருடன்தான் இருக்கிறேன்! அதர்வா பட நடிகை வேதனையுடன் வெளியிட்ட ஷாக் தகவல்!

நான் சாகவில்லை! உயிருடன்தான் இருக்கிறேன்! அதர்வா பட நடிகை வேதனையுடன் வெளியிட்ட ஷாக் தகவல்!


misti-chakaravarthy-tweet-she-is-alive

ஹிந்தி மற்றும் பெங்காலியில்  ஏராளமான திரைப்படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமான மிஸ்தி முகர்ஜி, தனது உடல் எடையை குறைப்பதற்காக
கீட்டோஜெனிக் எனும் டயட் முறையை பின்பற்றி வந்துள்ளார். இந்நிலையில் அவர் சிறுநீரகம் செயலிழந்து பெங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததை தொடர்ந்து சமீபத்தில் உயிரிழந்தார். 

இந்நிலையில் பல ஊடகங்களில் 
மிஸ்டி முகர்ஜயின் புகைப்படத்திற்கு பதிலாக, நடிகை மிஸ்டி சக்கரவர்த்தி என்பவரது புகைப்படத்தை தவறாக வெளியிட்டு அவர் இறந்துவிட்டதாக செய்திகளை வெளியிட்டு வந்துள்ளனர்.
இதனை கண்டு அதிர்ச்சியடைந்த மிஸ்டி சக்கரவர்த்தி இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர், சில மீடியாக்கள் நான் இறந்து விட்டதாக செய்திகளை வெளியிடுகின்றனர். கடவுளின் அருளால் நான் செல்ல வேண்டிய தூரம் இன்னும் அதிகமாகவே இருக்கிறது  எனக் கூறியுள்ளார். மேலும் இது போன்ற செய்திகளை வெளியிடுவதற்கு முன்பு நன்கு விசாரிப்பது நல்லது எனவும்  கூறியுள்ளார்.