ஹன்சிகாவை தொடர்ந்து புதிய சிக்கலில் சிக்கிய பேட்ட படத்தின் கதாநாயகி! அதிர்ச்சியில் சினிமா வட்டாரம்

ஹன்சிகாவை தொடர்ந்து புதிய சிக்கலில் சிக்கிய பேட்ட படத்தின் கதாநாயகி! அதிர்ச்சியில் சினிமா வட்டாரம்


mega akash instagram pages hacked

சமீபத்தில் ஹன்சிகாவின் அந்தரங்க கவர்ச்சி புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாக பரவியது. இதனை பார்த்த ரசிகர்கள் மிகவும் அதிர்ச்சி அடைந்தனர். இதனை தொடர்ந்து ஹன்சிகா தன்னுடைய மொபைல் மற்றும் ட்விட்டர் பக்கங்கள் ஹேக் செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்திருந்தார். மேலும் இது குறித்து தன்னுடைய தொழில்நுட்பக் குழு வேலை பார்த்து வருவதாகவும் கூறியிருந்தார்.

இதனைத் தொடர்ந்து பேட்ட மற்றும் வந்தா ராஜாவாதான் வருவேன் போன்ற படங்களில் கதாநாயகியாக நடித்துள்ள மேகா ஆகாஷ்ன் இன்ஸ்டாகிராம் பக்கம் ஹேக்கர்களால் ஹேக் செய்யப்பட்டுவிட்டது என்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

petta

மேகா ஆகாஷின் இன்ஸ்டாகிராம் கணக்கை ஹேக் செய்த ஹேக்கர்கள் ரஷ்ய டிஜே டம்லா என்று பெயரை மாற்றியுள்ளனர். மேலும் மேகா வெளியிட்டிருந்த புகைப்படங்களை நீக்கிவிட்டு டம்லாவின் கவர்ச்சி புகைப்படங்களை அப்லோடு செய்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து அவருக்காக வேலை செய்த தொழில்நுட்ப வல்லுநர்கள் அவரது இன்ஸ்டாகிராம் கணக்கை மீட்டுள்ளனர். அதன்பின் அதில் பதிவிட்டிருந்த அனைத்து புகைப்படங்களையும் நீக்கியுள்ளனர். இதனையும் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். மேலும் தனக்காக வேலை செய்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.

petta