அடேங்கப்பா! கவர்ச்சிக்கு பேர்போன மீராமிதுனா இது? இப்படி மாறிட்டாரே.. வாயடைக்கவைக்கும் புகைப்படங்கள் இதோ!!meeramithun-latest-photo-viral

தமிழ் சினிமாவில் தானா சேர்ந்த கூட்டம், 8 தோட்டாக்கள் உள்ளிட்ட சில படங்களில் நடித்தவர் மீரா மிதுன். மாடலிங் துறையில் மிகுந்த ஆர்வம் கொண்ட இவர், மிஸ் இந்தியா, மிஸ் தமிழ்நாடு உட்பட பல அழகி பட்டங்களை பெற்றுள்ளார். பின்னர் அதனை தொடர்ந்து பணமோசடி வழக்கில் மீரா மிதுன் தொடர்ந்து பல சர்ச்சையில் சிக்கி வந்தார்..

இந்நிலையில் மீரா மிதுன் பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் 16 போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டார். அதனை தொடர்ந்து பிக்பாஸ் வீட்டில் பல பிரச்சினைகளை எழுப்பிய அவரின் செயல்கள் பார்வையாளர்களுக்கு எரிச்சலை கிளப்பியது. பின்னர் குறைந்த வாக்குகளை பெற்று போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டார். 

Meeramithun

இந்நிலையில் பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேறிய மீரா மிதுன் பாலிவுட் படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார். மேலும் அதனைதொடர்ந்து அவர் முகம் சுளிக்கவைக்கும் மிகமோசமான கவர்ச்சி உடையில் அவ்வப்போது புகைப்படங்களை வெளியிட்டு வந்தார்.

இந்நிலையில் அவர் சமீபத்தில் சரவணன் வீட்டுவிழாவிற்கு சென்றுள்ளார். அங்கு அவர் சேலை கட்டி குடும்ப பெண்ணாக கலந்துகொண்டுள்ளனர். அங்கு அய்யனார் சிலைக்கு அருகே நின்றவாறு மீரா மிதுன் புகைப்படங்கள் எடுத்துள்ளார். மேலும் அந்த புகைப்படங்களை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.அந்த புகைப்படங்களை கண்ட ரசிகர்கள் வாயடைத்து போயுள்ளனர்.