இவருக்கெல்லாம் அம்மன் வேஷமா? நயன்தாராவை வம்பிற்கு இழுத்த பிக்பாஸ் பிரபலம்! கொந்தளித்த ரசிகர்கள்!

இவருக்கெல்லாம் அம்மன் வேஷமா? நயன்தாராவை வம்பிற்கு இழுத்த பிக்பாஸ் பிரபலம்! கொந்தளித்த ரசிகர்கள்!


meera-mithun-tease-nayanthara-acts-in-amman-character

ஆர்ஜே பாலாஜி நடித்து, இயக்கியுள்ள திரைப்படம் மூக்குத்தி அம்மன். இதனை அவருடன் என்.ஜே.சரவணனும் இணைந்து இயக்கியுள்ளார். மேலும் முழுக்க முழுக்க காமெடி நிறைந்த இப்படத்தை வேல்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் ஐசரி கணேஷ் தயாரித்துள்ளார். 

இதில் நடிகை நயன்தாரா அம்மனாக முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் இவர்களுடன் மெளலி, ஊர்வசி, ஸ்மிருதி வெங்கட் உள்ளிட்டோரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் இந்த திரைப்படம் வரும் தீபாவளிக்கு டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் ரிலீசாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Meera mithun

இந்தநிலையில் சர்ச்சைக்கு பெயர்போன பிக்பாஸ் மீரா மிதுன், நயன்தாரா அம்மன் வேடத்தில் நடித்தது குறித்து விமர்சனம் செய்து தனது ட்விட்டர் பக்கத்தில், திருமணமான ஆணுடன் உறவு வைத்திருப்பவரெல்லாம் இந்து கடவுளான அம்மனாக நடிக்கிறார். அம்மன் என்றால் என்னவென இவருக்கு தெரியுமா? இந்த மாதிரி இந்து கடவுள்களை அவமானப்படுத்தும் வகையில் மோசமான கதாபாத்திர தேர்வெல்லாம் தமிழகத்தில் அதுவும் கோலிவுட் சினிமாவில் மட்டுமே நடக்கும். இதுகுறித்தெல்லாம் அரசியல்வாதிகள் வாய் திறக்கமாட்டார்களா? என கேட்டுள்ளார். 

 இந்தப் பதிவு வைரலான நிலையில் நயன்தாரா ரசிகர்கள் பலரும் மீரா மிதுனுக்கு எதிராகவும், அவரை மோசமாக பேசியும் கமெண்ட் செய்து வருகின்றனர்.