சினிமா பிக்பாஸ்

வீணாக வம்பிற்கு வந்த போட்டியாளர்.! கொந்தளித்துப்போய் லாஸ்லியா செய்த காரியம்!! வைரலாகும் வீடியோ!!

Summary:

meera argue with losliya

 பிரபல தனியார் தமிழ் தொலைக்காட்சியான விஜய் டிவியில் கடந்த இரண்டு வருடங்களாக நடத்தப்பட்ட பிக்பாஸ் போட்டியின் மூன்றாவது சீசன் சமீபத்தில் துவங்கி மிகவும் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இந்த சீசனையும் நடிகர் கமலே மூன்றாவது முறையாக தொகுத்து வருகிறார்.

மேலும் இந்த ஆண்டு பிக்பாஸ் சீசன் 3ல் 15 போட்டியாளர்களுள் ஒருவராக இலங்கையை சேர்ந்த பிரபல செய்திவாசிப்பாளரான லாஸ்லியா கலந்துகொண்டுள்ளார். மேலும் நிகழ்ச்சி தொடங்கிய இரண்டு நாளிலேயே அவரது பந்தா இல்லாத பேச்சிற்கும், மற்றவர்களை பற்றி புறம் பேசாத  குணத்திற்கும் லாஸ்லியாவிற்கென ஏராளமான ரசிகர்கள் உருவாகினார்கள். மேலும் லாஸ்லியா ஆர்மியும் உருவானது.

bigg boss losliya க்கான பட முடிவு

இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மற்றொரு போட்டியாளரான மீரா மிதுன் இன்று லாஸ்லியாவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அதாவது மீரா லாஸ்லியாவிடம் உங்களை நண்பராக நினைத்தது எனது தவறுதான் என கூறுகிறார். 

இதனைக் கேட்ட லாஸ்லியா,  எனக்கு அனைவருமே நண்பர்கள்தான். உங்களுக்காக மதுமிதா ஆதரவாக இருந்தார் ஆனால் அவருக்கு பிரச்சினை எழுந்தபோது நீங்கள் அவ்வாறு நடந்து கொண்டது சரியில்லை என அதிரடியாக பதிலளித்து விட்டு அவ்விடத்தை விட்டு எழுந்து செல்கிறார்.

 இந்த பிரமோ வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் இதனை கண்ட நெட்டிசன்கள் அமைதியாக இருந்த பெண்ணையும் கோபப்பட வைத்து விட்டனர் என கூறி வருகின்றனர்.
 


Advertisement