13 ஆண்டு காதல்.. ஒரு வழியாக திருமணத்தை முடித்த விஜய் டிவி பிரபல நடிகர்.! குவியும் வாழ்த்துக்கள்!!
பொறாமையா இருக்கு.! அட. நடிகை மீனாவின் கனவு நிறைவேறமாலே போயிருச்சே.! அவரே கூறியதை பார்த்தீங்களா!!
மணிரத்னம் இயக்கத்தில் மிகவும் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் பொன்னியின் செல்வன். கல்கி எழுதிய 'பொன்னியின் செல்வன்' நாவலை தழுவி எடுக்கப்பட்ட இதனை லைகா புரொடக்ஷன்ஸ் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் இணைந்து தயாரித்துள்ளது. பொன்னியின் செல்வன் படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
இரு பாகங்களாக உருவாகியுள்ள இப்படத்தின் முதல் பாகம் இன்று தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் என 5 மொழிகளிலும் உலகளவில் திரையரங்குகளில் ரிலீசாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் இப்படம் குறித்து பிரபலங்கள் பலரும் பதிவுகளை வெளியிட்டு வந்தனர்.
இந்த நிலையில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகை மீனா வெளியிட்ட பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் அவர், எனக்கு மிகவும் பெருமையாக இருக்கிறது. எனது வாழ்க்கையில் முதன்முறையாக நான் பிறரைப் பார்த்து அதுவும் ஐஸ்வர்யா ராயை பார்த்து பொறாமைப்படுகிறேன். ஏனெனில் அவர் பொன்னியின் செல்வன் படத்தில் எனது கனவு கதாபாத்திரமான நந்தினி கேரக்டரில் நடித்துள்ளார் என பதிவிட்டுள்ளார். அந்த பதிவு வைரலாகி வருகிறது.