சினிமா

7 ஆண்டுகளுக்கு பிறகு, மீண்டும் சூப்பர் ஸ்டாருடன் இணையும் நடிகை மீனா! உறுதியான சூப்பர் தகவல்!

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, பின்னர் ரஜினி, கமல், சரத்குமார் என பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து ஏராளமான வெற்றித் திரைப்படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்களின் மனதில் கொடிகட்டி பறந்தவர் நடிகை மீனா.  

 முன்னணி நடிகையான இவர் சமீபகாலமாக குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். மேலும் தற்போது ரஜினியின் அண்ணாத்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துவருகிறார்.  கடந்த 2013-ல் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்று வசூல் சாதனை படைத்த படம் திரிஷ்யம். இப்படத்தில் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லாலுக்கு ஜோடியாக மீனா நடித்திருந்தார். 

த்ரிஷ்யம் திரைப்படம் தமிழில் கமல்ஹாசன் மற்றும் கௌதமி நடிப்பில் பாபநாசம் என ரீமேக் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து தற்போது 7 ஆண்டுகளுக்குப் பிறகு
திரிஷ்யம் படத்தின் இரண்டாம் பாகத்தை ஜீத்து ஜோசப் இயக்க உள்ளார். இப்படத்தில் ஹீரோவாக மோகன்லால் நடிக்க உள்ளார். இந்நிலையில் அவருக்கு ஜோடியாக மீண்டும் மீனாவே நடிப்பாரா என கேள்விகள் எழுப்பப்பட்ட நிலையில், தற்போது அது உறுதியாகியுள்ளது. 

அதாவது இன்று மீனாவிற்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய நடிகர் மோகன்லால் திரிஷ்யம்2 படப்பிடிப்புக்கு உங்களை வரவேற்கிறேன் என பதிவிட்டு திரிஷ்யம் 2 படத்தில் அவருக்கு ஜோடியாக மீனா நடிப்பதை உறுதி செய்துள்ளார்.


Advertisement